உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முகவர்கள் சுணக்கம் ஆவின் பால் விற்பனையில் சரிவு

முகவர்கள் சுணக்கம் ஆவின் பால் விற்பனையில் சரிவு

சென்னை;ஆவின் வாயிலாக சென்னையில், 15 லட்சம் லிட்டர் வரை பால் விற்பனை நடந்து வருகிறது. இந்நிலையில், 'ஸ்விகி, சொமோட்டோ, பிளிங்கிட், செப்டோ' உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள் வாயிலாக, பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை, ஆவின் நிறுவனம் துவங்கி, செயல்படுத்தி வருகிறது. ஆன்லைன் விற்பனை அறிமுகத்திற்கு பின், பால் விற்பனை பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரிய அளவில் மாற்றமில்லாத தால், ஆவின் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பால் முகவர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறிய தாவது: மாதவரம், சோழிங்க நல்லுார், அம்பத்துார் பால் பண்ணைகளில் இருந்து ஆவின் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு, காலை நேரத்தில் பால் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது, 'ஆன்லைன்' நிறுவனங்களுக்கு முதலில் பால் விநியோகம் செய்யப்படுகிறது. அதன்பின், பாலகங்களுக்கு தாமதமாக அனுப்பப்படுகிறது. இதுவே, ஆவின் பால் விற்பனை அதிகரிக்காததற்கு முக்கிய காரணம். ஆவின் பால் வராததால், மற்ற நிறுவன பால் பாக்கெட்டுகளை முகவர்கள் விற்பனை செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ