மேலும் செய்திகள்
இணை இயக்குநராக செழியன்பாபுக்கு பதவி உயர்வு
08-Aug-2025
சென்னை, வேளாண் வணிக திருவிழா, செப்., 27 மற்றும் 28ம் தேதிகளில் சென்னையில் நடத்தப்படும் என வேளாண் துறை அறிவித்துள்ளது. வேளாண் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: வேளாண் துறை வாயிலாக, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், செப்., 27, 28ல் வேளாண் வணிக திருவிழா நடத்தப்பட உள்ளது. இதை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதில், வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வளம், மத்திய அரசின் நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் என, 200க்கும் மேலான அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. செடி வகைகள் முதல், வேளாண் இயந்திரங்கள் வரை காட்சிப்படுத்தப்பட உள்ளன. புதிய தொழில்நுட்பங்களுடன் திட்டங்களையும் ஒருங்கிணைந்து, விவசாயிகளிடம் கொண்டு செல்வதை நோக்கமாக வைத்து, வேளாண் வணிக திருவிழா நடத்தப்பட உள்ளது. வேளாண் வணிக விழாவை வெற்றிகரமாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி தலைமையில் நடந்தது. இதில், வேளாண் வணிகப்பிரிவு செயலர் ஆபிரகாம், சர்க்கரை துறை இயக்குநர் அன்பழகன், வேளாண் இயக்குநர் முருகேஷ், தோட்டக்கலைத் துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன், ஆவின் இயக்குநர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
08-Aug-2025