உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / படப்பையில் 9ல் ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க., அறிவிப்பு

படப்பையில் 9ல் ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க., அறிவிப்பு

சென்னை, தமிழக அரசையும், குன்றத்துார் ஒன்றிய நிர்வாகத்தையும் கண்டித்து, படப்பையில், வரும் 9ம் தேதி, அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வண்டலுார் -வாலாஜாபாத் சாலை படப்பையில், மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால், வியாபாரிகள், மாணவர்கள் என, அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, படப்பை மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.குன்றத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட இடங்களில், குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை, ஊராட்சி நிர்வாகம் சீரமைக்கவில்லை. குடிநீர் வசதிகளும் முழுமையாக ஏற்படுத்தப்படவில்லை.இதற்கு காரணமான தி.மு.க., அரசையும், குன்றத்துார் ஒன்றிய நிர்வாகத்தையும் கண்டித்து, வரும் 9ம் தேதி, காலை 10:00 மணிக்கு, படப்பையில் உள்ள குன்றத்துார் ஒன்றிய அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ