உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஹார்டுவேர் உரிமையாளரை மிரட்டிய அ.தி.மு.க., பிரமுகர் கைது

ஹார்டுவேர் உரிமையாளரை மிரட்டிய அ.தி.மு.க., பிரமுகர் கைது

சென்னை,; படப்பை அருகே உள்ள கரசங்கால் ஊராட்சியை சேர்ந்தவர் தினேஷ்குமார், 27. அ.தி.மு.க., குன்றத்துார் ஒன்றிய இளைஞர் பாசறை துணைத் தலைவர். இவரது தாய் புனிதவள்ளி, கரசங்கால் ஊராட்சியின், 9வது வார்டு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், 'கரசங்கால் பகுதியில் கட்டுமானம் நடந்தால், அங்கு நான் தான் ஜல்லிக்கற்கள், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களை வழங்குவேன்; மற்றவர்கள் வழங்கக்கூடாது' என, தினேஷ்குமார் கூறி, கட்டுமான பொருட்களை வினியோகம் செய்தவர்களை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கரசங்கால் அடுத்த ஆதனுாரில் ஹார்டுவேர் கடை வைத்து நடத்தும் ராதாகிருஷ்ணன், 46, என்பவரையும், தினேஷ்குமார் மிரட்டியுள்ளார். இந்நிலையில், ராதாகிருஷ்ணனின் ஹார்டுவேர் கடையில் இருந்து கட்டுமான பொருட்களை கரசங்கால் பகுதிக்கு சரக்கு வேனில் எடுத்து சென்ற ஊழியரை, தினேஷ்குமார் தாக்கியுள்ளார். இதுகுறித்து, ராதாகிருஷ்ணன் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் நேற்று தினேஷ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ