மேலும் செய்திகள்
'யார் அந்த சார்?' அ.தி.மு.க., போஸ்டரால் பரபரப்பு
30-Dec-2024
போரூர், அண்ணா பல்கலை வளாகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.இந்த சம்பவத்தை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அந்தவகையில், போரூர் அடுத்த காரம்பாக்கத்தில், முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டோரை, போலீசார் உடனே கைது செய்தனர். இதனால், சலசலப்பு ஏற்பட்டது. அவர்களை மாநகர பேருந்து வாயிலாக, போரூரில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர்.இது குறித்து முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் கூறுகையில், ''பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கேட்டு, ஜனநாயக முறையில் போராட்டத்தை அறிவித்தோம். ஆர்ப்பாட்டம் துவங்கியதும், அனைவரையும் கைது செய்து, தி.மு.க., அரசு அடக்கு முறையை கையாளுகிறது,'' என்றார்.
30-Dec-2024