திருநின்றவூரில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
திருநின்றவூர், திருநின்றவூர் நகராட்சியை கண்டித்து, அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருநின்றவூர், காந்தி சிலை அருகே அ.தி.மு.க., சார்பில், திருநின்றவூர் நகராட்சியை கண்டித்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தலைமையில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம், அமைப்பு செயலர் சீனிவாசன், மாவட்ட செயலர் அலெக்சாண்டர் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வைகைச் செல்வன் பேசியதாவது: இந்த மாவட்டத்தின் அமைச்சர் எந்த பணியையும் செய்யவில்லை. சினிமாவுக்கு வில்லன் நடிகர் நாசர் இருப்பது போல், ஆவடிக்கு வில்லன் அமைச்சர் நாசர். பெட்டியை வாங்கி கொண்டு, அறிவாலயத்தின் வாசலில் படுத்துக் கொண்டிருக்கின்றன கம்யூனிஸ்ட் கட்சிகள். திருநின்றவூர் நகராட்சியில் நடக்கும் அவலங்களை, தி.மு.க., கூட்டணி கட்சிகள் கேட்பதாக இல்லை. திருநின்றவூர் நகராட்சியில் லஞ்சம் கொடுத்தால் தான், வேலை நடக்கிறது என கூறுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.