உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

அஸ்தினாபுரம், தாம்பரம் மாநகராட்சி, செம்பாக்கம் மண்டலத்தில் சமீபகாலமாக, அடிப்படை பணிகள் முறையாக நடக்கவில்லை. இதை கண்டித்து செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரத்தில் நேற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், மாவட்ட செயலர் சிட்லப்பாக்கம்ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மாநகராட்சி மற்றும் செம்பாக்கம் மண்டல நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கோஷம் எழுப்பினர்.அப்போது, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேசியதாவது:அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல், மக்களிடம் வரியை மட்டும் மாநகராட்சி வசூலிக்கிறது. கழிவுநீர் செல்ல வழியில்லை; குடிநீர் வசதியும் இல்லை. நோய்களை ஆரம்ப காலத்திலேயே கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதில்லை.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி