உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எண்ணுார் உர ஆலையால் காற்று மாசு? கருப்பு துகள் படிவதால் மக்கள் அலறல்

எண்ணுார் உர ஆலையால் காற்று மாசு? கருப்பு துகள் படிவதால் மக்கள் அலறல்

எண்ணுார், எண்ணுாரில் கோரமண்டல் உர தொழிற்சாலை, அதையொட்டி கோத்தாரி என்ற உர பேக்கிங் ஆலையும் செயல்பட்டு வருகிறது.கோத்தாரி ஆலையில் இருந்து வெளியேறும் கரும்புகை, வீடுகளின் மொட்டை மாடி, மேற்கூரை, மரங்களில் படிவதாக கூறப்படுகிறது.உணவு, தண்ணீரில் இந்த துகள் படிந்து விடுகிறது. இந்த நீர், உணவை உட்கொள்வதால், கண், தொண்டை எரிச்சல் ஏற்படுவதாக, சத்தியவாணி முத்து நகர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.பொதுமக்கள் புகாரையடுத்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அப்பகுதியில் நேற்று முகாமிட்டு, காற்றின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.ஊர் தலைவர் மதி, 56, கூறியதாவது:கோத்தாரி நிறுவனத்தில் இருந்து வெளியேறும் புகையால், 15 நாட்களாக இந்த பாதிப்பு உள்ளது. மூன்று நாட்களாக ஆலை செயல்படவில்லை. இருப்பினும் தொழிற்சாலை செயல்படும் போது, சிம்னி வழியாக வெளியேற்றப்படும் கழிவால், எங்கள் பகுதிக்கு பிரச்னை உள்ளது.மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தனர். ஆலை செயல்படாத நேரத்தில், ஆய்வு செய்து என்ன பயன் என்று கேட்டோம். அவர்கள் சென்று விட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.கோரமண்டல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:கோத்தாரி நிறுவனத்தை, எங்களின் கோரமண்டலம் நிறுவனம் குத்தகை அடிப்படையில் நடத்தி வருகிறது. இந்த நிறுவனம், அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் இயங்கி வருகிறது. அங்கு உரம் கையாளுதல், பேக்கிங் பணி மட்டுமே நடக்கிறது.வழக்கமான காற்று தர சோதனைகள் நடத்தப்படுகின்றன. கடும் துாசி, புகை வெளியேறுவதாக ஆதாரமின்றி குற்றம் சாட்டுகின்றனர்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை