ஏர்போர்ட் அதிகாரிகள் டில்லிக்கு மாற்றம்
சென்னை: சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை கமிஷனர் மற்றும் துணை கமிஷனர் ஆகியோர், டில்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். சென்னை விமான நிலையம் மூலம், தங்கம் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் அதிகரித்து வந்தன. இதையடுத்து, மத்திய நிதி அமைச்சகம் குழு ஒன்றை அனுப்பி விசாரணையில் ஈடுபட்டது. இந்நிலையில், சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை கமிஷனராக பணியாற்றி வந்த தமிழ்வளவன் மற்றும் துணை கமிஷனராக பணியாற்றி வந்த ஹரேந்திரசிங் பால் ஆகியோர், டில்லியில் சுங்கத்துறையின் டெக்னிக்கல் பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.