ஏர்போர்ட் உணவகம் மூடல்
ஊழியர் நலஉணவகம் மூடல்சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் செயல்பட்டு வந்த, ஊழியர் நல உணவகத்தின் தனியார் ஒப்பந்தம் ஜன., 31ம் தேதியுடன் முடிந்ததால், உணவகம் மூடப்பட்டது.விமான நிலையத்தில் உள்ள கடைகளை ஒப்பிடும்போது, இந்த உணவகத்தில் உணவு, டீ, காபி உள்ளிட்டவற்றின் விலை குறைவு. அதனால், இந்த உணவகத்தை மீண்டும் திறக்க, பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 'புதிய டெண்டர் விடப்பட உள்ளது. அதன்பின், இந்த உணவகம் இயங்கும்' என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.