உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  விமான நிலைய முனையம் மேம்பாட்டு பணியால் வாகன போக்குவரத்து மாற்றம்

 விமான நிலைய முனையம் மேம்பாட்டு பணியால் வாகன போக்குவரத்து மாற்றம்

சென்னை: முனையம் மேம்பாட்டு பணி காரணமாக, சென்னை விமான நிலையத்தில், தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில், 'டி3' இரண்டாம் கட்ட ஒருங்கிணைந்த சர்வதேச முனையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. நடப்பாண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, ராட்சத இரும்பு துாண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணி காரணமாக 'டி4' முனையத்தின் அருகே தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விமான நிலைய ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: தாம்பரத்தில் இருந்து விமான நிலைய டோல்கேட்டிற்கு வந்து, முனையத்திற்குள் இனி உள்நுழைய முடியாது. மாறாக, தாம்பரம் பகுதி யில் இருந்து விமான நிலை யத்திற்குள் வரும் கார்கள் ஜி.எஸ்.டி., அணுகு சாலையை பயன்படுத்தி, 'டெர்மினல் 2' மற்றும் டோல்கேட் வழியாக விமான நிலையத்திற்குள் செல்ல வேண்டும். அங்கிருந்து வெளியே செல்லும் வாகனங்கள் 'டி4' வழியாக வெளி யேறலாம். டெர்மினல் 1, டெர்மினல் 2, வழியாக வரும் வாகனங்களுக்கு எந்த மாற்றமும் இல்லை. டெர்மினல் 1 மற்றும் டெர்மினல் 4 இடையே, பயணியர் வசதிக்காக இயக்கப்படும் பேட்டரி வாகன சேவை, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பயணியர், 'வாக்கலேட்டர்' வழியாக நடந்து செல்லலாம். இந்த நடைமுறை ஏப்., 24ம் தேதி வரை அமலில் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த பணியாவது விரைந்து முடியுமா?

சென்னை விமான நிலையத்தில், முனைய மேம்பாடு மற்றும் வளர்ச்சி பணிகள், குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கப்படுவதில்லை. ஓடுபாதை அருகே மழைநீர் வடிகால்வாய் பணிகள், 'டி1' வருகை முனையம் எதிரே, 'ப்ளாசா' கட்டும் பணிகள் உட்பட பல திட்டங்கள் துவங்கி, குறித்த நேரத்தில் முடிக்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. தற்போது, பொது துறை நிறுவனமான 'எல் அண்டு டி' நிறுவனம், இரண்டாம் கட்ட ஒருங்கிணைந்த சர்வதேச முனையம் அமைக்கும் பணிகளை செய்து வருகிறது. அடுத்த மாதம் கோடை காலம் துவங்க உள்ளதால், பயணியரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். தற்போது துவங்கியுள்ள பணியை, குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை