உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆலந்துார் மண்டல குழு கூட்டம் மின் வாரியம் மீது குற்றச்சாட்டு

ஆலந்துார் மண்டல குழு கூட்டம் மின் வாரியம் மீது குற்றச்சாட்டு

ஆலந்துார்: ஆலந்துார் மண்டல குழு கூட்டம், தலைவர் சந்திரன் தலைமையில் சில தினங்களுக்கு முன் நடந்தது. மண்டல உதவி கமிஷனர் முருகதாஸ், செயற்பொறியாளர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:தி.மு.க., பாரதி, 158வது வார்டு: அந்தமான் காலனியில், மின்வாரிய கேபிள் உயிர்பலி வாங்கும் வகையில், பல மாதங்களாக திறந்தவெளியில் உள்ளது.அ.தி.மு.க., உஷாராணி, 157வது வார்டு: மாநகராட்சியின் வார்டு அலுவலகம் கட்ட வேண்டும் என்பது, நீண்ட நாள் கோரிக்கை. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.தி.மு.க., பிருந்தாஸ்ரீ, 160வது வார்டு: சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் செயல்படாமல் உள்ளது. வார்டில் பொருத்த ஏழு மின் மாற்றிகள் வாங்கி, இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. இதுவரை பொருத்தப்படவில்லை. வார்டில், 20 மின் கம்பங்கள் மாற்றப்பட வேண்டியுள்ளது. தி.மு.க., துர்காதேவி, 167வது வார்டு: நங்கநல்லுார், எம்.எம்.டி.சி., காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முகப்பு இரும்புகேட் விழுந்து, 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.எனவே, அடுக்குமாடி குடியிருப்பு கதவுகள், லிப்ட் போன்றவற்றின் தரம், உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.தி.மு.க., செல்வேந்திரன், 156வது வார்டு: வார்டு முழுதும், கூடுதல் நேரம் குடிநீர் விட வேண்டும். சபரி நகர் மின் வாரிய கேபிள் திறந்தவெளியில், விபத்து நிகழும் வகையில் உள்ளது.தி.மு.க., சாலமோன், 162வது வார்டு: நோபல் தெருவில் அனுமதியின்றி சாலை வெட்டப்பட்டு உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.முனுசாமி தெருவில் மின் மாற்றியை மாற்ற வேண்டும். மாரீசன் ஐந்து தெருக்களில் சேகரமாகும் மழைநீர் வெளியேற, உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.இதையடுத்து, தி.மு.க.,வை சேர்ந்த மண்டல குழு தலைவர் சந்திரன் பேசியதாவது:போக்குவரத்து அதிகம் உள்ள சாலையில் நடைபாதை அமைத்தால், அதில் ஆக்கிரமிப்பு கடைகள் முளைத்துவிடுகின்றன. அதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.எனவே, நடைபாதை அமைப்பது தொடர்பான தீர்மானம் தேவையற்றது. மண்டலம் முழுதும் உள்ள குளங்கள், பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்களை பராமரிக்க வேண்டும்.பெரும்பாலான கவுன்சிலர்கள், மின் வாரியத்தின் மீது புகார் அளித்துள்ளனர். கோடைகாலம் நெருங்குவதால், மின் வாரியம் தனி கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில், 41 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை