உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓட்டேரியில் வாலிபர் மர்ம மரணம் அடித்து கொன்றதாக குற்றச்சாட்டு

ஓட்டேரியில் வாலிபர் மர்ம மரணம் அடித்து கொன்றதாக குற்றச்சாட்டு

டி.பி.,சத்திரம், ஓட்டேரி, குக்ஸ் சாலையைச் சேர்ந்த ரமேஷ் மகன் புருஷோத்தமன் என்ற ராகுல், 22; அண்ணா நகர் கிழக்கு பகுதியில் உள்ள அரிசி ஆலை கூலி தொழிலாளி.கடந்த 25ம் தேதி, அதே பகுதி 'டாஸ்மாக்' மதுக்கூடத்தில், நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார்.அப்போது, மதுக்கூட ஊழியருடன் தகராறு ஏற்பட்டதால், அங்கிருந்து கிளம்பி, பணிபுரியும் இடத்தின் மூன்றாவது மாடியில் மது அருந்தினர்.அப்போது, மது போதையில் இருந்த புருஷோத்தமன், எச்சில் துப்புவதற்காக நடந்து சென்றபோது, மாடியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.நண்பர்கள் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். சுயநினைவின்றி இருந்த புருஷோத்தமன், சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். டி.பி., சத்திரம் போலீசார், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.இந்நிலையில், மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, புருஷோத்தமனின் உடலை வாங்க மறுத்து, போலீசாரிடம் பெற்றார் வாக்குவாதம் செய்தனர். சம்பவம் குறித்து, டி.பி., சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.புருஷேத்தமன் பெற்றோர் கூறியதாவது:மகனுக்கு இரு முறை சுயநினைவு வந்தபோது, தன்னை அடித்ததாக கூறினார். அவனது நண்பர்கள், மகனை பீர் பாட்டிலால் அடித்து, கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம்.போலீசார் முறையாக விசாரிக்கவில்லை. உடலில் காயங்கள் இருக்கின்றன. அதனால், மகன் இறப்பில் சந்தேகம் இருக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி