உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சசிகலாவை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா?: சீமான் கேள்வி

சசிகலாவை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா?: சீமான் கேள்வி

தேனி: சசிகலாவை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா? என டிடிவி தினகரனுக்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் சீமான் வேட்பாளர் மருத்துவர் மதன் ஜெயபாலனுக்கு ஆதரவாக, தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது: சசிகலாவை நான்கரை ஆண்டுகள் சிறையில் வைத்தவர்கள் யார்?. உங்களை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா?. சசிகலா பதவியேற்பதை தடுக்க 22 நாட்கள் தாமதப்படுத்தியது யார்?. சசிகலா வழக்கை அவசரமாக விசாரித்து தண்டனை வழங்கியது யார்?. பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு சசிகலா கூறியவுடன் அவசரமாக விசாரிக்க சொன்னது யார்?.

எனக்கு மிரட்டல்

சசிகலா குடும்பத்தில் நிகழ்ந்த அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் பா.ஜ., தான். டிடிவி தினகரன், சசிகலா பிரச்னையில் இருந்த போது தமிழகத்தில் குரல் கொடுத்த ஒரே ஆள் நான். இரட்டை இலை சின்ன வழக்கில் கைதானவர் இன்னும் சிறையில் இருக்கிறார். என்னை மிரட்டி பார்த்தார்கள், நான் சமரசம் ஆகவில்லை, சரணடையவில்லை.

குக்கர் சின்னம் எப்படி?

விவசாயி சின்னத்தை முடக்கி விட்டார்கள் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் எனக் கூறுகிறார்கள். இப்பொழுது அமமுக.,வுக்கு குக்கர் சின்னம் எப்படி வந்தது. நீங்கள் முதலில் போய் கேட்டீர்களா?. நீங்கள் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தால் சின்னம் கிடைக்கிறது. எனது சின்னத்தை வேற ஒருவருக்கு கொடுத்துள்ளார்கள். இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Ramesh Kumar
ஏப் 01, 2024 15:51

Ama ivaru matum


Baski
ஏப் 01, 2024 15:15

சசிகலா மீது வழக்கு பதிவு செய்தவர்கள் யார் என்று தங்களுக்கு தெரியாதா? தவறு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டுமா? இல்லையா? தவறு செய்தவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டதும் குற்றத்தில் சேருகிறதோ !


sethu
ஏப் 01, 2024 15:07

தனது சின்னம் எப்படி வாங்கணும்னு தெரியாத தற்குறி இவரெல்லாம் சசிகலாவைப்பற்றி பேசுகிறார்


Sck
ஏப் 01, 2024 14:52

ஏ, சீமானு, சசிகலாவ உச்சநீதிமன்றம் ஜெயில்ல வச்சுதா, இல்ல பஜகவா. இந்த அரைவேக்காடு எல்லாம் அரசியல் வந்தா இதான் நடக்கும். நாம் டம்பளர் ஏன் சொல்றோம் இப்பவாவது தெரியுதா. சும்மா எத்தயாவது உளர வேண்டியது.


Krishnamurthy Venkatesan
ஏப் 01, 2024 14:49

அப்படியே, மிசாவில் உங்களை உள்ளே வைத்தவர்களுடன் கூட்டணியா என திமுகவைப் பார்த்தும், INDIA கூட்டணியில் இருந்து கொண்டே காங்கிரஸிற்கு ஒரு சீட் கூட ஒதுக்காத மம்தா அவர்களை பார்த்தும் ஒரு கேள்வி கேட்டு விடுங்கள்


Palanisamy Sekar
ஏப் 01, 2024 14:32

அப்படி பார்த்தால் டிடிவி தினகரன் பயந்துகொள்ள முடியாது சீமான் தான் அவரது கருத்துப்படி பயந்துகொள்ளணும்நாளையே நடிகை விஜயலக்ஷ்மி சீமான் மீது புகார் சொன்னாலோ அல்லது அவர் மிரட்டியவாறு தற்கொலை செய்துகொண்டாலோ சீமான் உள்ளெ போவது இவர் சொன்னமாதிரியே இவருக்கே அதனை செய்து காட்டிட வேண்டியது கட்சியின் சின்னம் கிடைக்கலையென அண்ணாமலை மீது புகார் வாசித்தார் என்னமோ அண்ணாமலைதான் தேர்தல் கமிஷனர் என்று எண்ணிக்கொண்டு இப்போ சசிகலா மீது கரிசனம் வருகின்றது சீமானுக்கு ஓட்டுக்களை பிரிக்கவே திமுகவுடன் கள்ளத் தொடர்ப்பில் இருக்கும் சீமான் உஷாராக இருக்கணும் பெங்களூருவிலிருந்து எந்த நேரத்திலும் ஷாக் செய்தி அவரை தாக்கக்கூடும் ஒருமுறையாவது இவருக்கு வேண்டுமென்றேனும் இவர் பேசியதுபோலவே செய்து காட்டிட வேண்டும்


பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளா .
ஏப் 01, 2024 14:31

சசிகலாவை சிறையில் வைத்ததற்காக சீமான் வருந்துகிறாரே, அவர் என்ன சுதந்திர போராட்ட தியாகியா? CD விற்ற சின்னம்மாவிடம் கோடிகள் குவிந்தது எப்படி? ஜெயலலிதா துணையுடன், அரசு பதவிக்கு வராமலேயே ஊழல் செய்த பெருச்சாளி தானே சசிகலா. கேவலம், ஓட்டுக்கான பிரச்சாரத்தில் ஊழல் பெருச்சாளிக்கு வக்காலத்து வாங்கும் அளவிற்கு சீமான் தரம் இறங்கலாமா?


karthikeyan.p
ஏப் 01, 2024 14:19

ஊழல் செய்தவர்களுடன் கூட்டணி வைத்துள்ளது பிஜேபி தமிழ் நாட்டில்


Shankar
ஏப் 01, 2024 14:10

அவங்க யாரோடையாவது கூட்டணி சேர்ந்துட்டு போறாங்க உங்க வேட்பாளரை எப்படி ஜெயிக்க வைக்கணும்னு பாப்பீங்களா


Indian
ஏப் 01, 2024 14:09

நாம் தமிழர் வெற்றி உறுதி


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி