உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  விவேகானந்தா கல்லுாரியில் கூடி முன்னாள் மாணவர்கள் குதுாகலம்

 விவேகானந்தா கல்லுாரியில் கூடி முன்னாள் மாணவர்கள் குதுாகலம்

சென்னை: ''கலாசாரம், பாரம்பரியம் குறித்த பாடப்பிரிவை, விவேகானந்தா கல்லுாரியி ல் நடைமுறைப்படுத்த வேண்டும்,'' என, தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னர் நரசிம்மன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை, மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லுாரியின், சர்வதேச முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, அக்கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. தலைமை விருந்தினராக, சண்டிகர், தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களின் முன்னாள் கவர்னரும், விவேகானந்தா கல்லுாரியின் முன்னாள் மாணவருமான நரசிம்மன் பேசியதாவது: நம் பாரம்பரியம் குறித்து நமக்கே சிலர் பாடம் எடுக்கின்றனர். நாம் எப்போதும் பாரம்பரியம் நிறைந்தவர்கள். நம் முன்னோர் காலத்தில் இருந்தே பாரம்பரியத்தை கடைபிடித்து வருகிறோம். தற்போது, அதற்கு சில இடையூறுகள் வருகின்றன. அவற்றை நாம் சரியாக எதிர்கொள்ள வேண்டும். இளைஞர்கள் மத்தியில், இதுகுறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டும். கலாசாரம், பாரம்பரிய ம் குறித்த பாடப்பிரிவை, இக்கல்லுாரியில் நடைமுறைப்படுத்த வேண்டும். நம் கடமைகளில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். பிறர் மூளைச்சலவை செய்வதற்கு இடமளிக்காமல், உறுதியாக இருந்தால் நம் வாழ்வை மேம்படுத்தலாம். இவ்வாறு அவர் பேசினார். தொழிலதிபரும், கல்லுாரியின் முன்னாள் மாணவருமான ஹரிஹரன் பேசுகையில், ''முன்னாள் மாணவர்கள் பலர் கல்லுாரிக்கு நிதி உதவி, பிற உதவிகளை செய்து வருகின்றனர். இந்த சேவை மேலும் அதிகரிக்க வேண்டும்,'' என்றார். இந்நிகழ்ச்சியில், கல்லுாரி செயலர் சுவாமி தியானகம்யானந்தா மஹராஜ், பேராசிரியர்கள் மற்றும் 1946ம் ஆண்டு படித்த மாணவர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் சந்தித்து, கல்லுாரி நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ