உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அம்பாள்

மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அம்பாள்

சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா, 'சக்தி கொலு' எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.இரண்டாம் நாளான நேற்று மாலை 'சக்தி' கொலுவில் அம்பாள் மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை லலிதா சகஸ்ரநாம, வேத பாராயணம் நடந்தது. மகளிர் குழுவினர் கொலு பாட்டு பாடப்பட்டது.நேற்று மாலை லாஸ்யா நடன நிறுவன மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, பேபி திவ்யாவின் பக்திப்பாடல் கச்சேரி நடந்தது. பக்தர்களுக்கு, அம்மன், முருகன், நுால், விபூதி, குங்குமம், அர்ச்சனை பிரசாதம் அடங்கிய பை வழங்கப்பட்டது.

'சக்தி' கொலுவில் இந்தாண்டு சிறப்பு

வடபழனி ஆண்டவர் கோவில் சக்தி கொலுவில், இந்தாண்டு சிறப்பாக பிரசித்தி பெற்ற கோவில்களின் மூலவர் சிலைகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன.அந்த வகையில், சுருட்டப்பள்ளி பள்ளி கொண்டீஸ்வரர், அயோத்தி ராமர், திருபுவனம் சரபேஸ்வரர், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர், காஞ்சிபுரம் உலகளந்தபெருமாள் ஆகியோர், சக்தி கொலுவில் தத்ரூபமாக அருள்பாலிக்கின்றனர்.குறிப்பாக, அயோத்தியில் ராமர் கோவில் உள்ள ராம் லல்லாவின் மூலவர் விக்ரஹர சிலை சக்தி கொலுவில் தத்ரூபமாக இருப்பதால், பக்தர்கள் பார்வை ராம் லல்லாவை விட்டு அகல மறுக்கின்றன. மேலும், குறி சொல்லும் அம்மன், வெற்றிலை அம்மன், குழந்தை அம்மன், மீனாட்சி அம்மனின் மூல விக்ரஹங்கள் பக்தர்களை கவர்ந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை