வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மக்கள் வரிப்பதில் ஆட்சியாளர்கள் பெயர் வைத்த திட்டங்கள் இப்படித்தான் அழிந்து போகும். இரண்டு கட்சிகளையும் தான் சொல்லறேன்.
சென்னை மாநகராட்சி பகுதியில் ஏழை மக்களுக்காக, சுத்திகரிக்கப்பட்ட கேன் குடிநீம் வழங்கும் திட்டத்தை, 2016ம் ஆண்டு, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.அத்திட்டத்தின்படி துவக்கத்தில், 200 கோடி ரூபாயில், சென்னை மாநகராட்சி மண்டலங்கள் முழுதும் அடித்தட்டு, நடுத்தர மக்கள் வசிக்கும் இடங்களை தேர்வு செய்து, 100 அம்மா குடிநீர் மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.முதல்கட்டமாக, 100 கோடி ரூபாய் செலவில், 53 இடங்களில் அம்மா குடிநீர் மையங்கள் திறக்கப்பட்டன. அங்கு, தனியார் கேன் குடிநீருக்கு இணையாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பொதுமக்களுக்கு இலவசமாக வினியோகிக்கப்பட்டது.இந்த அம்மா குடிநீர் மையங்கள் ஒவ்வொன்றிலும், 400 பயனாளி குடும்பங்கள் பயன்பெற்று வந்தன. அவ்வாறு, 53 மையங்களிலும் தினமும் 20,000 குடும்பங்கள் பயன்பெற்று வந்தன. இத்திட்டத்தின் கீழ் ஒரு மணிநேரத்தில் 3,000 லிட்டர் வரை குடிநீர் தயாரிக்கப்பட்டது. ஒரு நபருக்கு நாளொன்றுக்கு, 20 லிட்டர் வீதம், 4 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்கப்பட்டது.இதை பெற, பயனாளிகளுக்கு மாநகராட்சி சார்பில், 'ஸ்மார்ட் கார்டு'ம் வழங்கப்பட்டது. இவற்றுக்கான நீராதாரம், சென்னை குடிநீர் வாரியம் வாயிலாக பெறப்பட்டது. இந்த குடிநீர் மையங்களில் ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பெற வேண்டுமெனில், தோராயமாக ஒரு லிட்டர் நீர் கழிவாக வெளியேறும்.மாநகராட்சியில் உள்ள, 53 மையங்களிலும், தினமும் 4 லட்சம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க, அதே அளவுள்ள 4 லட்சம் லிட்டர் நீர் கழிவாக வெளியேற்றப்பட்டது. மேலும், பராமரிப்பிற்காக ஆண்டிற்கு சில கோடி ரூபாய் செலவானது.கடந்த, 2019ம் ஆண்டு கோடையில், சென்னை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு உச்சத்தில் இருந்தது. மாநகராட்சியின் பல பொதுக்கழிப்பறைகள் நீரின்றி மூடப்பட்டன. மாநகராட்சி பள்ளிகளில் கழிப்பறைகளை பயன்படுத்த முடியவில்லை. அந்த அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது.அப்போது, அம்மா குடிநீர் மையங்களில் இருந்து கழிவாக வீணாக வெளியேற்றப்பட்ட நீரை, சிரமப்பட்டு மழைநீர் வடிகாலுக்குள் சிறு பாத்திரங்களை நுழைத்து நீரை பிடித்து, வீட்டு புழக்கத்திற்கு பயன்படுத்திக் கொண்டனர்.அம்மையங்களை அமைக்கும்போதே, தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து, தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் அந்த நீரை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் வகையில், அம்மையங்களில் கட்டமைப்பை ஏற்படுத்த மாநகராட்சி தவறிவிட்டது. பின், கொரோனா பரவல் காலத்தில் பல மையங்கள் பராமரிப்பின்றி மூடப்பட்டன.கொரோ தடை முடிந்த பிறகு, மூடப்பட்ட பல குடிநீர் மையங்கள் மீண்டும் திறக்கப்படவில்லை. அவற்றை முழுமையாக பராமரிக்கவும் இல்லை. இவற்றின் வாயிலாக சுகாதாரமான குடிநீர் அருந்தி வந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள், மீண்டும் தனியாரின் கேன் குடிநீரை நம்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.* குடிநீர் வாரிய வசம்:இதனிடையே கடந்த ஆண்டு மத்தியில், இந்த அம்மா குடிநீர் மையங்களின் பராமரிப்பு, செயல்பாடுகளை குடிநீர் வாரியத்திடம் ஒப்படைக்க, மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், இன்றளவில் பெரும்பாலான குடிநீர் வாரிய மையங்கள் செயல்படாமல் போனது.எனவே, சம்பந்தப்பட்ட குடிநீர் வாரிய அதிகாரிகள், இந்த பிரச்னை குறித்து தனி கவனம் செலுத்தி ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
அம்மா குடிநீர் நிலையங்களில் நிலப்பரப்பு நீர் தான் பயன்படுத்தப்படுகிறது. அதில் கால்சியம், மக்னீசியம், சோடியம் போன்ற தாது பொருட்கள் உள்ளன. அந்த நீரை எதிர்மறை சவ்வூடு பரவல் முறையில் சுத்திகரிக்கும் போது, கழிவாக வெளியேறும் நீரில் தாது பொருட்களின் அடர்த்தி சற்று அதிகமாக இருக்கும்.அந்த நீர் குடிக்க உகந்தது இல்லை. ஆனால் அதை கழிப்பறைகளுக்கும், வீடுகளில் பாத்திரம், அறைகளை கழுவவும், பிற தேவைகளுக்கும் பயன்படுத்தலாம். அந்த நீருடன் சம அளவு சாதாரண நீரை கலந்தால், வழக்கமாக பயன்படுத்தும் நீருக்கு இணையான தன்மையை பெறும். அது அசுத்தமான தண்ணீர் இல்லை.- மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் - -நமது நிருபர் --
மக்கள் வரிப்பதில் ஆட்சியாளர்கள் பெயர் வைத்த திட்டங்கள் இப்படித்தான் அழிந்து போகும். இரண்டு கட்சிகளையும் தான் சொல்லறேன்.