உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அம்ருதா பல்கலை நுழைவுத்தேர்வு இன்று ரிசல்ட்

அம்ருதா பல்கலை நுழைவுத்தேர்வு இன்று ரிசல்ட்

சென்னை அம்ருதா விஸ்வ வித்யாபீடம் பல்கலையில் சேருவதற்காக நடத்தப்பட்ட, நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.இந்தியாவின் முன்னணி பல்துறை பல்கலையான, அம்ருதா விஸ்வ வித்யா பீடத்தில், நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்காக, நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியாகிறது. ஜே.இ.இ., தேர்வு அடிப்படையிலான விண்ணப்பதாரர்கள், அம்ருதா பல்கலை நுழைவுத் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான இட ஒதுக்கீடு செயல்முறை துவக்கப்பட்டுள்ளது. தகுதி பெற்றவர்கள், அவர்களின் அம்ருதா தர வரிசை, ஜே.இ.இ., மதிப்பெண்கள் மற்றும் கல்வி விருப்பங்களின் அடிப்படையில், விரும்பிய பி.டெக் பாடப்பிரிவுகளில் சேரலாம்.இட ஒதுக்கீடு அட்டவணை, ஆவண சரி பார்ப்பு, கட்டணம் செலுத்தும் வழிமுறைகள் மற்றும் விபரங்களை, https://aeee.amtita.edu இணையதளத்தில் காணலாம். அனைத்து பி.டெக்., பிரிவுகளுக்கும், 75 சதவீதம் வரை கட்டண விலக்கு வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ