வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கால kodumai...
அம்பத்துார், அம்பத்துார் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் எதிரே, மேனாம்பேடு சாலையில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணி அளவில் பணி முடிந்து ஊழியர்கள் வீடு திரும்பினர். அப்போது, 'யமஹா ரே' ஸ்கூட்டரில் வந்த மூன்று போதை வாலிபர்கள், அம்பத்துார் மண்ணுார்ப்பேட்டையைச் சேர்ந்த அசன் மைதீன், 35, மேனாம்பேடைச் சேர்ந்த தனசேகரன், 47, உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திர குமார், 35, பீஹாரைச் சேர்ந்த தீபக், 27, ஆகியோரை கத்தியால் சரமாரியாக வெட்டினர்.தொடர்ந்து, அம்பத்துார் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகே உணவகம் ஒன்றில் இரவு உணவு வாங்க வந்த, திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடைச் சேர்ந்த நவீன், 20, என்பவரது தலையில், போதை ஆசாமிகள் சரமாரியாக வெட்டி தப்பினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அனைவரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், நவீனுக்கு மூளையில் ரத்தகசிவு ஏற்பட்டதால், போரூர் ராமசந்திரா மருத்துவமனையில், பின் பக்க தலையில், 22 தையல்கள் போடப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில், அம்பத்துார் மங்களபுரத்தைச் சேர்ந்த நித்தியவேல், 20, லோகேஷ், 18, மணிகண்டன், 22, ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.இந்நிலையில், அம்பத்துாரில் பதுங்கியிருந்த மூன்று பேரையும் தனிப்படை போலீசார், நேற்று மதியம் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதில், நித்தியவேல், லோகேஷ் ஆகியோர், குற்ற வழக்குகளில் சிறை சென்று வந்தவர்கள். கடந்த 29 நாட்களாக அம்பத்துார் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் காலை, மாலை என, இரு வேளைகளிலும் கையெழுத்து போட்டு வந்துள்ளனர்.சிறைக்கு சென்று வந்ததால், உரிய வேலை கிடைக்கவில்லை. போதிய உணவும் கிடைக்கவில்லை.அதனால், மீண்டும் சிறை செல்ல வேண்டும் என்கிற எண்ணத்தில், இந்த அராஜகத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
கால kodumai...