மேலும் செய்திகள்
67 தமிழக படகுகள் ஏலம் இலங்கை அரசு உத்தரவு
23-Feb-2025
காசிமேடு:ஆந்திர மாநிலம், நெல்லுாரைச் சேர்ந்தவர் அமாவாசை, 55; மீனவர். இவர், காசிமேடில் தங்கி, கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், மீன்பிடி தொழில் செய்து வந்தார்.ஒரு வாரத்திற்கு முன் ஏழு மீனவர்களுடன், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். நேற்று ஞாயிறுக்கிழமை என்பதால், விசைப்படகில் அமாவாசை கரை திரும்பினார்.மீன்களை, விசைப்படகில் இருந்து இறக்கும்போது கால் தவறி கடலில் விழுந்தார். நீச்சலடித்து, அமாவாசை மேலே வர முயன்றபோது, பின்னால் வந்த வேறொரு விசைப்படகில் அடிபட்டு, நீரில் மூழ்கி உயிரிழந்தார்.காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார், அமாவாசை உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.
23-Feb-2025