உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அங்கன்வாடி மையம் மணலியில் திறப்பு

அங்கன்வாடி மையம் மணலியில் திறப்பு

மணலி,மணலியில், 69 லட்ச ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம் மற்றும் உடற்பயிற்சி கூடத்தை, எம்.எல்.ஏ., சங்கர் திறந்து வைத்தார்.மணலி மண்டலம், 22 வது வார்டு, காங்கிரஸ் கவுன்சிலர் தீர்த்தியின் வார்டு மேம்பாட்டு நிதி, 69 லட்ச ரூபாயில், உடற்பயிற்சி கூடம் மற்றும் அங்கன்வாடி மையம் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. சின்னசேக்காடு - பல்ஜிபாளையம் பகுதியில், 40 லட்ச ரூபாயில், புதிய அங்கன்வாடி மையம்; தேவராஜன் தெருவில், 29 லட்ச ரூபாய் செலவில், உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டுள்ளது.இவற்றை, திருவொற்றியூர் எம்.எல்.ஏ., - கே.பி.சங்கர் திறந்து வைத்தார். அப்போது, உடற்பயிற்சி கூடத்தில், எம்.எல்.ஏ., உடற்பயிற்சி செய்தார். நிகழ்ச்சியில், செயற்பொறியாளர் தேவேந்திரன், உதவி பொறியாளர் மைதிலி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை