உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அண்ணா பல்கலை மண்டல வாலிபால் ஆர்.எம்.டி., - ஏ.எம்.எஸ்., சாம்பியன்

அண்ணா பல்கலை மண்டல வாலிபால் ஆர்.எம்.டி., - ஏ.எம்.எஸ்., சாம்பியன்

சென்னை, அண்ணா பல்கலையின் முதலாவது மண்டலத்திற்கான வாலிபால் போட்டியில், மாணவியர் பிரிவில் ஆர்.எம்.டி., அணியும் மாணவர்கள் பிரிவில் ஏ.எம்.எஸ்., கல்லுாரி அணியும் வெற்றி பெற்று, 'சாம்பியன்' கோப்பை கைப்பற்றியது.முதலாவது மண்டலத்திற்கான வாலிபால் போட்டி, திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே., பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.இதில், மொத்தம் 17 கல்லுாரி அணிகள் பங்கேற்று, நாக் அவுட் முறையில் மோதின.வெற்றி பெற்ற அணிகளுக்கு ஆர்.எம்.கே., கல்விக்குழுமங்களின் துணைத்தலைவர் கிஷோர் சாம்பியன் கோப்பைகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை