உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னையில் மேலும் ஒரு ரவுடி என்கவுன்டர்! போலீசாரை சுட்ட சீசிங் ராஜா சுட்டுக்கொலை

சென்னையில் மேலும் ஒரு ரவுடி என்கவுன்டர்! போலீசாரை சுட்ட சீசிங் ராஜா சுட்டுக்கொலை

சென்னை : பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துக் கொடுப்பது போல நடித்து, போலீஸ் இன்ஸ்பெக்டரை சுட்ட ரவுடி சீசிங் ராஜா, என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். சென்னையில், ரவுடிகள் திருவேங்கடம், காக்கா தோப்பு பாலாஜியை தொடர்ந்து, மூன்றாவதாக ஒரு ரவுடி, என்கவுன்டரில் பலியாகி உள்ளார்.சென்னை, கிழக்கு தாம்பரம், ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா, 51. ரவுடி. இவர் நிலம், வீடுகளை அபகரிப்பது, தவணை தொகை செலுத்தாத வாகனங்களை,'சீசிங்' செய்து தரும் தொழில் செய்து வந்ததால், 'சீசிங் ராஜா' என, அழைக்கப்பட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2hxqgdzs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவருக்கு ஜானகி, ஜான்சி, வினித்ரா என, மூன்று மனைவியர் உள்ளனர். இவர்களில் ஜான்சி, ஆந்திராவைச் சேர்ந்தவர். சீசிங் ராஜாவுக்கு, 24 வயதில் மகளும், 16 வயதில் ஒரு மகன் மற்றும் ஒன்றரை மாத குழந்தையும் உள்ளனர்.துவக்கத்தில் சிறிய குற்றங்களில் ஈடுபட்டு வந்த இவருக்கு, ரவுடிகள் ஆற்காடு சுரேஷ், மார்க்கெட் சிவா உள்ளிட்டோரின் நட்பு கிடைத்தது. கொலை, ஆள் கடத்தல், துப்பாக்கியை காட்டி பணம் பறிப்பு, வீடு, நிலம் அபகரிப்பு பேன்றவற்றில் ஈடுபட்டு வந்தார்.ஆறு கொலை, மூன்று ஆள் கடத்தல் உட்பட, 39 வழக்குகள் சீசிங் ராஜா மீது நிலுவையில் உள்ளன. எட்டு முறை குண்டர் சட்டத்திலும் அடைக்கப்பட்டார். 2021ல் ஜாமினில் வெளிவந்த பின், தலைமறைவானார்.இவர் மீது, 10க்கும் மேற்பட்ட பிடியாணை நிலுவையில் இருந்ததால், இவரை, தேடப்படும் குற்றவாளியாக, செங்கல்பட்டு நீதிமன்றம் கடந்த ஆகஸ்டில் அறிவித்தது. சேலையூர் போலீசார், இவரது படத்துடன் போஸ்டர் ஒட்டி தேடினர்.இதற்கிடையே, பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், இவருக்கு தொடர்பு இருப்பதாக தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

ஆந்திராவில் கைது

இந்நிலையில், சீசிங் ராஜா, தன் மனைவி வினித்ராவுடன் ஆந்திர மாநிலம், கடப்பா அருகே, ராஜம்பேட் என்ற இடத்தில் வாடகை வீட்டில் வசிப்பது போலீசாருக்கு தெரிந்தது.அப்பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அவர் நேற்று முன்தினம், சென்ற போது, அங்கு காத்திருந்த அடையாறு சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் இளங்கனி உள்ளிட்ட தனிப்படை போலீசார், சீசிங் ராஜாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின், சென்னைக்கு அழைத்து வந்தனர்.கடந்த ஆகஸ்டில் மதுக்கூட ஊழியர் ஆனந்தன் என்பவரிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கு விசாரணைக்காக, வேளச்சேரி சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் விமலிடம் ஒப்படைத்தனர்.விசாரணையின் போது, தான் பயன்படுத்திய நாட்டு கைத்துப்பாக்கியை, அக்கரை பகுதி பகிங்ஹாம் கெனால் பேங்க் சாலையில் பதுக்கி வைத்திருப்பதாக, சீசிங் ராஜா கூறியுள்ளார்.

துப்பாக்கி சண்டை

துப்பாக்கியை பறிமுதல் செய்ய, இன்ஸ்பெக்டர்கள் இளங்கனி, விமல் மற்றும் மூன்று போலீசார் , அவரை அந்த இடத்திற்கு நேற்று அதிகாலையில் அழைத்துச் சென்றனர்.அப்போது, புதரில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துக் கொடுப்பது போல சென்ற சீசிங் ராஜா, துப்பாக்கியை எடுத்து இன்ஸ்பெக்டர் இளங்கனியை நோக்கி இரண்டு முறை சுட்டுள்ளார்.இதில், வாகனம் மீது குண்டுகள் பாய, அதிர்ஷ்டவசமாக இளங்கனி உயிர் தப்பினார். அப்போது இன்ஸ்பெக்டர் விமல், துப்பாக்கியை கீழே போடுமாறு சீசிங் ராஜாவை எச்சரித்துள்ளார்.ஆனால், இன்ஸ்பெக்டர் விமலை நோக்கியும் சீசிங் ராஜா சுட முயன்றார். இதையடுத்து, விமல் இரு முறை சுட்டத்தில், சீசிங் ராஜாவின் மார்பில் குண்டுகள் பாய்ந்து சுருண்டு விழுந்தார்.உடனே, போலீஸ் வாகனத்தில் நீலாங்கரையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். டாக்டர்கள் பரிசோதனையில், சீசிங் ராஜா இறந்தது தெரிந்தது.

மனைவியர் கதறல்

இதுகுறித்து, நீலாங்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். சீசிங் ராஜா உடல் பிரேத பரிசோதனைக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து, சோழிங்கநல்லுார் மாஜிஸ்திரேட் விசாரணைக்கும், போலீஸ் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.சீசிங் ராஜா உடல் வைக்கப்பட்டுள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு, அவரின் மனைவி ஜானகி மற்றும் 24 வயது மகள் வந்தனர். அப்போது, 'அடுத்த மாதம் மகளுக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில், என் கணவரை கொன்றுவிட்டார்களே' என, ஜானகி கதறி அழுதார்.முன்னதாக, சீசிங் ராஜாவின் இன்னொரு மனைவி வினித்ரா, கைக்குழந்தையுடன் வெளியிட்ட வீடியோவில், 'ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட அன்று தான், எனக்கு சீமந்தம் நடந்தது.அன்று, என் கணவர் என்னுடன் தான் இருந்தார். டிபன் வாங்கி வருவதாக கூறிச்சென்ற அவரை, தனிப்படை போலீசார் பிடித்துச் சென்றுள்ளனர். என் கணவரை உயிருடன் என்னிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று வீடியோ வெளியிட்டார்.

'ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பில்லை'

தென் சென்னை இணை கமிஷனர், சிபி சக்கரவர்த்தி கூறியதாவது:சீசிங் ராஜா கொடூர குற்றங்கள் செய்யும் 'ஏ பிளஸ்' பிரிவு ரவுடி.மதுக்கூட ஊழியர் ஆனந்தன் என்பவரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில், சீசிங் ராஜாவை தேடினோம். கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்துவதே எங்கள் நோக்கம். ஆனால் அவர், துப்பாக்கியை எடுத்துக் கொடுப்பது போல, இரு இடங்களுக்கு அழைத்துச் சென்று ஏமாற்றினார். மூன்றாவதாக, சம்பவம் நடந்த இடத்தில், போலீசாரை துப்பாக்கியால் சுட்டதால், அவரை சுட வேண்டிய நிலை ஏற்பட்டது.சீசிங் ராஜா போன்ற 'ஏ பிளஸ்' பிரிவு ரவுடிகளிடம் தான் துப்பாக்கிகள் உள்ளன. துப்பாக்கி எப்படி கிடைக்கிறது என்பதன் பின்னணி குறித்து விசாரிக்கிறோம்.பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலையில், சீசிங் ராஜாவுக்கு தொடர்பு இருப்பது போல தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

ஒரே பாணியில் 3 என்கவுன்டர்

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடி திருவேங்கடம் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். ஜூலை 14ல், அதிகாலையில், திருவேங்கடம் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்ய, மாதவரம் அருகே அழைத்துச் சென்றனர். அப்போது அவர், பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் சுட முயன்றார். இதனால், தற்காப்பிற்காக என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.இதேபோல, செப்., 18ல், வியாசர்பாடியில் சுற்றி வளைக்கப்பட்ட ரவுடி காக்கா தோப்பு பாலாஜி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணனை இருமுறை துப்பாக்கியால் சுட்டார்.இதனால், தற்காப்பிற்காக என்கவுன்டர் செய்யப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர். அதே பாணியில், சீசிங் ராஜாவும் போலீசாரை சுட்டதால், தற்காப்பிற்காக சுட்டத்தில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக, போலீசார் தெரிவித்து உள்ளனர்.

'ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பில்லை'

தென் சென்னை இணை கமிஷனர், சிபி சக்கரவர்த்தி கூறியதாவது:சீசிங் ராஜா கொடூர குற்றங்கள் செய்யும் 'ஏ பிளஸ்' பிரிவு ரவுடி.மதுக்கூட ஊழியர் ஆனந்தன் என்பவரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில், சீசிங் ராஜாவை தேடினோம். கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்துவதே எங்கள் நோக்கம். ஆனால் அவர், துப்பாக்கியை எடுத்துக் கொடுப்பது போல, இரு இடங்களுக்கு அழைத்துச் சென்று ஏமாற்றினார். மூன்றாவதாக, சம்பவம் நடந்த இடத்தில், போலீசாரை துப்பாக்கியால் சுட்டதால், அவரை சுட வேண்டிய நிலை ஏற்பட்டது.சீசிங் ராஜா போன்ற 'ஏ பிளஸ்' பிரிவு ரவுடிகளிடம் தான் துப்பாக்கிகள் உள்ளன. துப்பாக்கி எப்படி கிடைக்கிறது என்பதன் பின்னணி குறித்து விசாரிக்கிறோம்.பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலையில், சீசிங் ராஜாவுக்கு தொடர்பு இருப்பது போல தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

என்றும் இந்தியன்
செப் 24, 2024 16:32

வேடிக்கையிலும் வேடிக்கை பிரபல ரவுடியாம்???ரவுடின்ன்னா டாஸ்மாக்கினாட்டிலே ஒரு பெரிய பதவியா என்ன???ஓஹோ இப்படி இருக்கும் ஒழுங்கா கமிஷன் போயிட்டிருக்கும் திருட்டு திராவிடத்திற்கு அது அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள், கமிஷன் நிறுத்தப்பட்டால் இப்படித்தான் அடக்கும் என்று சொல்கின்றதா என்ன???ரவுடி என்று தெரிந்தால் அவன் இருக்கவேண்டிய இடம் ஜெயில் அல்லது மேலுலகம் ???பிரபல ரவுடி என்பது ஒரு கம்பெனியின் Chairman, மேனேஜிங் டைரக்டர் ஆ என்ன திருட்டு திராவிட சித்தாந்தத்தில்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை