வாலிபரை தாக்கி நகை திருடிய வழக்கு: மேலும் ஒரு பெண் கைது
வியாசர்பாடி:வியாசர்பாடி, எம்.கே.பி.நகர் 3வது இணைப்பு சாலையைச் சேர்ந்தவர் ஹித்தேஷ், 26. இவர், கடந்த 14ம் தேதி, 'கிரைண்டர்' செயலி மூலம், ஏற்கனவே பழக்கமான நண்பரை, ஓரினச் சேர்க்கைக்கு அழைத்துள்ளார்.நள்ளிரவு 12:00 மணியளவில் ஹித்தேஷ் வீட்டிற்கு, 35 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண்கள், ஒரு இளம்பெண் என மூன்று பேர் வந்து, ஹித்தேைஷ குளியல் அறையில் கட்டிப்போட்டு தாக்கி, வீட்டில் இருந்த 30 சவரன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்களை திருடி தப்பினர்.இது குறித்து எம்.கே.பி.நகர் போலீசார் விசாரித்து, விழுப்புரத்தில் பதுங்கி இருந்த, வியாசர்பாடியைச் சேர்ந்த ஜெயந்திநாதன், 35, அம்பத்துாரைச் சேர்ந்த அய்யப்பன், 34, மற்றும் 17 வயது சிறுமி உட்பட விழுப்புரத்தில் பதுங்கி இருந்த மூவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். இதில், ஜெயந்திநாதன் மூளையாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது.அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஜெயந்திநாதன் 'கிரைண்டர்' செயலியில் ஆண்கள், பெண்களை தேடுவோரை குறிவைத்து, அவர்கள் வீட்டிற்கு தம்பதி சென்று, தனியாக ஒன்றாக இருந்து அதை வீடியோ எடுத்து, மிரட்டி பணம் பறித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயந்திநாதனின் மனைவி எஸ்தர், 31, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.