உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஹோட்டலில் கஞ்சா பயன்படுத்திய வழக்கில் மேலும் ஒரு பெண் கைது

ஹோட்டலில் கஞ்சா பயன்படுத்திய வழக்கில் மேலும் ஒரு பெண் கைது

சென்னை, பட்டினப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து, கஞ்சா பயன்படுத்தியது தொடர்பாக, 11 பேரை கைது செய்த போலீசார், நேற்று மேலும் பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.பட்டினப்பாக்கத்தில், 'சோமர்செட்' என்ற நட்சத்திர ஹோட்டல் உள்ளது. இங்கு தங்கியுள்ள சிலர் கஞ்சா பயன்படுத்தி வருவதாக, பட்டினப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, கஞ்சா பயன்படுத்தி வந்த சூளையைச் சேர்ந்த ஜெகதீஸ்வர், 34, உட்பட, 11 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 35 கிராம் கஞ்சா, 48 மில்லி கிராம் ஓ.ஜி., கஞ்சா, ஐ போன் உட்பட, 12 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா, 39, என்பவரை, பட்டினப்பாக்கம் போலீசார் நேற்று கைது செய்து, 3.25 கிராம் கஞ்சா, அவற்றை பயன்படுத்துவதற்கான உபகரணங்கள், ஐ போன் ஒன்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ