உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏ.பி.எல்., டி - 20 கிரிக்கெட் ரெட் டிராகன் அணி சாம்பியன்

ஏ.பி.எல்., டி - 20 கிரிக்கெட் ரெட் டிராகன் அணி சாம்பியன்

சென்னை : ஏ.பி.எல்., 'டி - 20' கிரிக்கெட் போட்டியில், ரெட் டிராகன் அணி சாம்பியன் கோப்பையை வென்றது. வழக்கறிஞர்களுக்கு இடையிலான, 2வது சென்னை 'அட்வகேட் பிரீமியர் லீக்' டி - 20 கிரிக்கெட் போட்டியில், சென்னையைச் சேர்ந்த 12 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டிக்கு ரெட் டிராகன், எம்.எல்.ஏ., 11 அணிகள் தகுதி பெற்றன. இறுதிப்போட்டி, மெரினா கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்று முதலில் பேட் செய்த ரெட் டிராகன் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் அடித்தது. சேதுபதி 40 ரன்களும், சாமுவேல் கவுதம் 21 ரன்களும் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய எம்.எல்.ஏ., அணிக்கு, துவக்கமே அதிர்ச்சி அளித்தது. அந்த அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 11.2 ஓவர்களில் 38 ரன்களுக்கு சுருண்டது. இதனால், 109 ரன்கள் வித்தியாசத்தில், ரெட் டிராகன் அணி அபார வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !