மாநகராட்சி மேல்நிலை பள்ளிகளில் பிற மாவட்ட ஆசிரியர்கள் நியமனம்
சென்னை, சென்னை மாநகராட்சி மேல்நிலை பள்ளிகளில் பணியாற்ற விருப்பமுள்ள மற்ற பள்ளிகளின் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என, மாநகராட்சி கல்வி அலுவலர், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். . இதுகுறித்து சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி மேல்நிலை பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு, அலகு விட்டு அலகு மாறுதல் என்ற அடிப்படையில், மற்ற துறை பள்ளிகள் மற்றும் மற்ற மாவட்ட மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சேரலாம். தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளியல், வரலாறு, மனைஅறிவியல், அரசியல் அறிவியல் ஆகிய பாடங்களின் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், செப்., 2 வரை விண்ணப்பிக்கலாம். அவர்கள், உரிய துறைத்தலைவரிடம் தடையில்லா சான்று பெற்று,, செப்., 6ல் நடக்க உள்ள கலந்தாய்வில் பங்கேற்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.