உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முட்டாள் தின கொண்டாட்டம் வினையாக முடிந்த விளையாட்டு

முட்டாள் தின கொண்டாட்டம் வினையாக முடிந்த விளையாட்டு

பேசின்பாலம், புளியந்தோப்பைச் சேர்ந்தவர் தில்லை குமார், 35. இவரை, வீட்டின் அருகே ஒரு கும்பல், நேற்று முன்தினம் வெட்ட முயன்றது.அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடும்போது, விடாமல் துரத்தி சென்ற கும்பல் கே.பி.பார்க் குடியிருப்பு அருகே வைத்து மடக்கி வெட்டியது. காயங்களுடன் பேசின்பாலம் காவல் நிலையம் சென்ற தில்லைகுமாரை, போலீசார் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.இந்த நிலையில், புளியந்தோப்பை சேர்ந்த மதன்ராஜ், 38, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் தில்லைகுமாரை வெட்டியதாக கூறி சரண் அடைந்துள்ளார்.அவரை பேசின்பாலம் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, 'கடந்த ஏப்., 1ம் தேதி மதன்ராஜ் மது போதையில் புளியந்தோப்பு டிமலஸ் சாலையில், போவோர் மீது கலர் பொடி துாவியும், முட்டை அடித்தும் முட்டாள் தினம் கொண்டாடியுள்ளார்.அப்போது அங்கு வந்த தில்லைகுமார் மீதும் கலர் பொடி துாவியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து மதன்ராஜை தில்லைகுமார் அடித்துள்ளார். வெட்டி விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதன்ராஜ், முந்திக் கொண்டு தில்லைகுமாரை வெட்டியது தெரியவந்துள்ளது.தில்லைகுமாரை வெட்டிய மதன்ராஜின் நண்பர்களான சந்தோஷ், 22, அருண்குமார், 23, ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை