உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரங்கநாதன் சுரங்கப்பாதை நீரை வெளியேற்ற 2 அடி உயரத்தில் குழாய் அமைக்க முடிவு

அரங்கநாதன் சுரங்கப்பாதை நீரை வெளியேற்ற 2 அடி உயரத்தில் குழாய் அமைக்க முடிவு

சைதாப்பேட்டை, அடையாறு மண்டலம், 169வது வார்டில் உள்ள, அரங்கநாதன் சுரங்கபாதை, சென்னையில் உள்ள முக்கிய சுரங்கபாதையாக உள்ளது. மொத்தம் 180 மீட்டர் நீளம், 50 அடி அகலம் மற்றும் சாலை மட்டத்தில் இருந்து மைய பகுதி 20 அடி ஆழம் கொண்டது. சாதாரண மழை, ஒரு மணி நேரத்திற்கு மேல் பெய்தால் வெள்ளம் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்படும். சுங்கபாதையில் தேங்கும் மழைநீர், 20 அடி ஆழம் கொண்ட மூன்று கிணறுகளில் தேங்கும். அதை, இரண்டு டீசல் மற்றும் ஏழு மின்மோட்டார்களால் இறைத்து, வடிகால் வழியாக, 140 மீட்டர் துாரத்தில் உள்ள ரெட்டிக்குப்பம் கால்வாயில் விடப்படும். கால்வாயின் கொள்ளளவை மீறி வெள்ளம் செல்லும்போது, சுரங்கப்பாதையில் இருந்து செல்லும் வடிகாலில் நீரோட்டம் தடைபடுகிறது. இதனால், மணிக்கணக்கில் சுரங்கப்பாதையில் வெள்ளம் தேங்கி பாதிப்பு மேலும் அதிகரித்தது. இதை தடுக்க, மாநகராட்சி சார்பில், 32.28 லட்சம் ரூபாயில், வடிகால் மட்டத்தில் இருந்து 2 அடி உயரத்தில், 140 மீட்டர் நீளம், 2 அடி விட்டம் கொண்ட குழாய் அமைக்கப்பட உள்ளது. வடிகாலில் நீரோட்டம் தடையாகும்போது, இந்த குழாய் வழியாக நீரை இறைந்து கால்வாயில் விட முடிவு செய்யப்பட்டு உள்ளது.குழாய் அமைக்கும் பணி, பத்து நாளில் துவங்கி, மூன்று நாளில் முடியும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை