மேலும் செய்திகள்
கார் தீ பிடித்து எரிந்து நாசம்
26-Feb-2025
எம்.ஜி.ஆர்., நகர், நெசப்பாக்கம் - ராமாபுரம் பிரதான சாலையில், போலீஸ் பூத் அருகே உள்ள தள்ளுவண்டி டிபன் கடையில், போதை ஆசாமி ஒருவர் நேற்று முன்தினம் இரவு தகராறில் ஈடுபட்டார்.அப்போது, இரவு ரோந்து பணயில் இருந்த, எம்.ஜி.ஆர்., நகர் போலீஸ்காரர் ஹரி, மது போதையில் இருந்த நபரை வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தி சென்றார்.சிறிது நேரம் கழித்து, அதே பகுதிக்கு போலீஸ்காரர் மீண்டும் வந்த போது, போதை ஆசாமி அங்கிருந்து செல்லாமல் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்.அவரை அங்கிருந்து செல்ல, போலீஸ்காரர் மீண்டும் அறிவுறுத்தினார். அப்போது, நான் மதுரைக்காரன். நான் சொன்னால் மதுரையில் இருந்து ஆள் வந்து, உன்னை துாங்கி செல்வர் என மிரட்டியுள்ளார்.இதையடுத்து, போலீஸ்காரர் ஹரி, தனது மொபைல் போனில் அவர் கூறுவதை வீடியோ பதிவு செய்ய முயன்றார்.அப்போது, போதை ஆசாமி அவரது மொபைல் போனை பறித்ததால், அது கீழே விழுந்து சேதமடைந்தது.இதையடுத்து, அந்த நபரை போலீஸ் பூத்தில் வைத்து விசாரித்தனர். அதில், ரகளையில் ஈடுபட்ட நபர், நெசப்பாக்கம் டாக்டர் கானு நகர், நான்காவது குறுக்கு தெருவை சேர்ந்த சின்னசாமி, 50, என்பதும், பெயின்டர் வேலை செய்து வருவதும் தெரிந்தது.இதையடுத்து, அவரது வீட்டு உரிமையாளரை அழைத்து, எழுதிவாங்கி விட்டு, காலையில் காவல் நிலையம் வர அறிவுறுத்தி அனுப்பினர்.இதையடுத்து, நேற்று காலை காவல் நிலையம் வந்த சின்னசாமியிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
26-Feb-2025