மேலும் செய்திகள்
மதுரையில் ஜூன் 22ல் முருக பக்தர்கள் மாநாடு
08-Mar-2025
திருவொற்றியூர், திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலுக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். விழாக்காலங்களில் கூட்டம் கட்டுக்கடங்காது.கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்களின் தாகத்தை தீர்க்கும் பொருட்டு, திருக்கோவில் நிர்வாகம் சார்பில் வடிவுடையம்மன் சன்னதி முன், நேற்று காலை நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.நிகழ்ச்சியில், கோவில் உதவி கமிஷனர் நற்சோணை, திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தனியரசு உள்ளிட்டோர் பங்கேற்று, பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கினர். தவிர, கோவில் வளாகத்தின் சிமென்ட் தரையில், வெயில் தாக்கம் தெரியாதபடி, வெள்ளை பெயின்ட் அடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், கோவில் வளாகத்தில் இருக்கும் மணல் பகுதியில், தேங்காய் நார் தரை விரிப்பான்கள் போடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
08-Mar-2025