உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆட்டோ ஓட்டுநரிடம் பணம் பறித்தோர் கைது

ஆட்டோ ஓட்டுநரிடம் பணம் பறித்தோர் கைது

திருவான்மியூர், திருவான்மியூர், செங்கேணி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகதாஸ், 43; ஆட்டோ ஓட்டுநர். இவர், நேற்று அதிகாலை, திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோவில் அருகில், சவாரிக்காக நின்று கொண்டிருந்தார்.அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், முருகதாசிடம் கத்தியை காட்டி மிரட்டி, 750 ரூபாய் பறித்து சென்றனர்.திருவான்மியூர் போலீசாரின் விசாரணையில், திருவான்மியூர், கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விஜயகுமார், 35, லோகேஷ், 20, பாளையம், 36, என தெரிந்தது.போலீசார் நேற்று மூன்று பேரையும் கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !