உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீடு புகுந்து தொடர் திருட்டு கில்லாடி கூட்டாளிகள் கைது

வீடு புகுந்து தொடர் திருட்டு கில்லாடி கூட்டாளிகள் கைது

திருவேற்காடு : திருவேற்காடு அடுத்த மேல் அயனம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரோ பிரின்ஸ் ஜெரால்டு, 35. இவர், கடந்த 2ம் தேதி இரவு, குடும்பத்துடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். ஆண்ட்ரோ பிரின்ஸ் ஜெரால்டு விழித்துக் கொண்டு சுதாரிப்பதற்குள், படுக்கை அறையின் கதவை வெளியே பூட்டிவிட்டு, 15 சவரன் நகை, லேப்டாப் மற்றும் 'ஹீரோ பேஷன் ப்ரோ' பைக்கையும் திருடி தப்பினர். புகாரின் படி வந்த திருவேற்காடு போலீசார், மர்ம நபர்களை தேடி வந்தனர். கடந்த வாரம், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் துாங்கிக் கொண்டிருந்த பயணி ஒருவரிடம், மர்ம நபர் ஒருவர் மொபைல் போன் திருடியதை கேமராவில் கண்காணித்த போலீசார் அந்த நபரை மடக்கிப்பிடித்தனர். போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய போது, தவறி விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டது. விசாரணையில், மீஞ்சூரைச் சேர்ந்த கார்த்திக் என்ற திருட்டு கார்த்திக், 20, என தெரிந்தது. அவர் மீது, மீஞ்சூர் போலீசில் திருட்டு, கொள்ளை வழக்குகள் பதிவாகி இருந்தனர். இதற்கிடையே, அயனம்பாக்கம் திருட்டு வழக்கில், யோகேஸ்வரன், 20, என்பவரை திருவேற்காடு போலீசார், நேற்று முன்தினம் கைது செய்து விசாரித்தனர். இவர் கார்த்திக்கின் நண்பர் என்பதும் தெரிந்தது.போலீசார் கூறியதாவது: வீட்டில் ஆட்கள் இருக்கும் போது கதவை உடைத்து திருடுவதில் கார்த்திக் கில்லாடி. கார்த்திக்குக்கு பைக் ஓட்ட தெரியாததால், யோகேஷ்வரனுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். திருவேற்காடில் வீடு புகுந்து திருடியதும் இவர்கள் தான். கடந்த 1 ம் தேதி, மீஞ்சூரிலும் ஒரு வீட்டில் புகுந்து நகைகளை கொள்ளை அடித்துள்ளனர். திருடியவற்றை பங்கு போட்ட பின், காதலியுடன் மதுரைக்கு செல்ல வந்த கார்த்திக், மொபைல் போன் திருடி, போலீசிடம் சிக்கியுள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை