உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு கல்லுாரியில் கலை விழா

அரசு கல்லுாரியில் கலை விழா

சென்னை: ''கலைகள் மனித நேயம், சேவை மனப்பான்மையை வளர்க்கும்,'' என, பெரும்பாக்கம் கல்லுாரி முதல்வர் கூறினார். பெரும்பாக்கம் அரசு கலை கல்லுாரியில், ஒரு வாரம் கலை விழா நடந்தது. இதில், மாணவ - மாணவியரின் கலை திறனை மேம்படுத்தும் வகையில், நடனம், குழு நடனம், பாடல், இசை, நகைச்சுவை, நாடகம், கவிதை, சிறுகதை, இளைஞர் பார்லிமென்ட் உள்ளிட்ட 32 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்ற வர்களுக்கு, நேற்று முன்தினம் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் உமா மகேஸ்வரி பேசியதாவது: மாணவ - மாணவி யரின் அறிவு திறனை மேம்படுத்தும், கலை போட்டிகள் நடத்தப்பட்டன. நிதி ஒதுக்கீடு குறித்த விவாதம், புதையல் வேட்டை, ஆலோசனைகள் என்ற ஐடியா மணி, நெருப்பில்லாமல் சமைப் போம், தற்காப்பு கலை போன்ற கலைகள், அறிவு, உடல் திறன், ஒழுக்கம் சார்ந்தவையாக இருந்தன. கல்வி, அறிவை வளர்க்கும். கலைகள், மனித நேயம், சேவை மனப் பான்மையை வளர்க்கும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியை பேராசிரியர்கள் முன் னின்று நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை