அசோக் நகர் பயணிகள் அவதி
அசோக் நகர் பயணிகள் அவதி
அசோக் நகரிலும் அவதி
அசோக் நகர், நெசப்பாக்கம், கே.கே., நகர் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையாக, அசோக் பில்லர் சாலை உள்ளது. இச்சாலையில் கே.கே., நகர் அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ., மருத்துவமனை, அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இதில், இவற்றை பயன்படுத்துவோர், அரசு மருத்துவமனை அருகே உள்ள நிறுத்தத்தில் பேருந்திற்கு காத்திருப்பது வாடிக்கை. இவ்வழியாக காலை மற்றும் மாலை நேரத்தில், போதிய பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், பயணியர் கூட்டம் கூட்டமாக, நீண்ட நேரம் பேருந்திற்கு காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே, இவ்வழித்தடத்தில் போதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.