உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆசிய கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் தமிழக வீரர், வீராங்கனையர் கலக்கல்

ஆசிய கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் தமிழக வீரர், வீராங்கனையர் கலக்கல்

சென்னை, ஆசிய கிக் பாக்சிங் கூட்டமைப்பு சார்பில், ஆசிய கிக்பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி, தென் கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள கம்போடியா நாட்டில், கடந்த 6ல் துவங்கி 13ம் தேதி வரை நடந்தது.இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர்.போட்டியில், தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில், இரு வீரர்கள், மூன்று வீராங்கனையர், இந்திய அணியாக பங்கேற்றனர். போட்டியில், புல் காண்டக்ட், லைட் காண்டக்ட் ஆகிய பிரிவுகளில் பல்வேறு எடை வாரியாக நடந்தது.இதில், தமிழக வீராங்கனை நீனா ஒரு தங்கம், இரண்டு வெள்ளியும், சுனிதா தலா ஒரு வெள்ளி மற்றும் வெண்கலமும், அனிதா வெள்ளியும், சாதிக் ஒரு வெண்கலம், விக்னேஷ் ஐந்தாம் இடத்தையும் பிடித்து அசத்தினர்.தமிழக வீரர்கள் ஒட்டுமொத்தமாக ஒரு தங்கம், நான்கு வெள்ளி, இரண்டு வெண்கலம் வென்று அசத்தினர். இந்திய அணி மொத்தமாக ஆறு தங்கம், 12 வெள்ளி, ஒன்பது வெண்கலம் என, மொத்தம் 27 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் ஐந்தாம் இடத்தை பிடித்தது.நேற்று காலை சென்னை திரும்பிய தமிழக வீரர், வீராங்கனையருக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை