மேலும் செய்திகள்
திருவள்ளூரில் தடகளம் செப்., 2ல் துவக்கம்
23-Aug-2025
மாவட்ட தடகள வீரர்கள் தேர்வு செப்.,5ல் நடக்கிறது
31-Aug-2025
ஆசிய கோப்பை வென்ற India
08-Sep-2025
சென்னை;நாட்டில் மூன்றாவது முறையாக நடக்கும், ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, சென்னையில் நவ., 5ம் தேதி துவங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எம்.ஏ.எப்.ஐ., எனும் இந்திய மாஸ்டர்ஸ் தடகள கூட்டமைப்பு சார்பில், 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை, பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில், நவ., 5ல் துவங்குகிறது. போட்டி தொடர்பாக, சென்னையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், சங்கத்தின் பொதுச் செயலர் டேவிட் பிரேம்நாத் கூறியதாவது: ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டி, நவ., 5ல் துவங்கி, 9ம் தேதி வரை நடக்கிறது. இந்தோனேஷியாவில் நடக்கவிருந்த இப்போட்டியானது, சில காரணங்களால் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு முன், 2000, 2006ல் பெங்களூரில் நடந்தது. தற்போது, நாட்டில் மூன்றாவது முறையாக, சென்னையில் நடக்கிறது. இதில், 35 - 95 வயதுடைய 14 வயது பிரிவுகளில் 600க்கும் மேற்பட்ட போட்டிகள் நடக்கின்றன. இந்தியா சார்பில், 2,500 பேர் உட்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்த 4,000 வீரர் - வீராங்கனையர் பங்கேற்கின்றனர். தமிழக அரசின் ஆதரவில் இப்போட்டி நடக்கிறது கடந்த 2023ல் பிலிப்பைன்ஸில் நடந்த இப்போட்டியில், இந்திய வீரர்கள் 265 பதக்கங்களை வென்றனர். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்வில், உலக மாஸ்டர்ஸ் தடகள தலைவர் மார்கிரிட் ஜங், செயலர் ஜூவான் ஒர்டேனெஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
23-Aug-2025
31-Aug-2025
08-Sep-2025