உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லிப்ட் மின் இணைப்பை துண்டித்து அட்டூழியம்

லிப்ட் மின் இணைப்பை துண்டித்து அட்டூழியம்

சென்னை; திருநின்றவூர் ரயில் நிலையத்தில், 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், முதல் மற்றும் ஐந்தாவது நடைமேடையில் மின்துாக்கி அமைக்கப்பட்டு உள்ளது. இதில் முதலாவது நடைமேடை மின்துாக்கி அடிக்கடி பழுதாகி வந்தது. ரயில்வே அதிகாரிகள் சோதனை செய்தபோது, மின்துாக்கிக்கான மின் இணைப்பை துண்டிக்கும் வகையில் 'பிரேக்கர் சுவிட்ச்'சை, யாரோ அடிக்கடி ஆப் செய்வது தெரிந்தது. தவிர, மாலை மற்றும் இரவு நேரங்களில், மின்துாக்கி திறக்கும்போது, அதன் கதவு ஓரத்தில் சிறிய கற்கள் வைப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. முதியோர், கர்ப்பிணியர் வசதிக்காக அமைக்கப்பட்ட மின்துாக்கியை அவ்வப்போது பழுதாக்கி வரும் மர்ம நபர்கள் குறித்து, ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ