உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கள்ளத்தொடர்பு விவகாரம் வாலிபருக்கு கவனிப்பு

கள்ளத்தொடர்பு விவகாரம் வாலிபருக்கு கவனிப்பு

ஓட்டேரி, வியாசர்பாடி, எம்.கே.பி., நகரை சேர்ந்தவர் நித்யானந்தம், 30. இவர், புரசைவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் டிரைவராக வேலை பார்க்கிறார். அதே குடியிருப்பில் வீட்டு வேலை செய்யும் பெண்ணுடன், அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, அப்பெண்ணின் கணவரான புரசைவாக்கத்தை சேர்ந்த ராயிட்சன், 34, என்பவருக்கு தெரியவந்தது.இதனால் ஆத்திரமடைந்த அவர், நண்பர்களுடன் சேர்ந்து, நேற்று முன்தினம் இரவு, ஓட்டேரி, செல்லப்பா தெருவில் சென்று கொண்டிருந்த நித்யானந்தத்தை தாக்கி, அருகே உள்ள நண்பர் வீட்டுக்கு கொண்டு சென்று அடித்துள்ளனர்.மூன்று மணி நேரம் கழித்து, அவரை வெளியே அனுப்பியுள்ளனர். காயமடைந்த நித்யானந்தம், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.மருத்துவமனை அளித்த தகவலின்படி, ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராயிட்சனை கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள பெண் உட்பட, மேலும் ஐவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை