உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரவுடியாக வலம் ஆட்டோ ஓட்டுநர் கைது

ரவுடியாக வலம் ஆட்டோ ஓட்டுநர் கைது

பெரவள்ளுர், பெரவள்ளூர் கே.சி., கவுண்டர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார், 48. இவர், திரு.வி.க., நகர் மீன் சந்தை அருகில் ஆட்டோ மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு வந்த, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன், 39 என்ற சரித்திர பதிவேடு ரவுடி, தன் ஆட்டோவை இலவசமாக சர்வீஸ் செய்து தரும்படி கூறி மிரட்டியுள்ளார். ஆனால் விஜயகுமார் மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கமலக்கண்ணன், கடையில் இருந்த ஊழியர்களை சரமாரியாக தாக்கி தப்பி சென்றார். விஜயகுமார் அளித்த புகாரை அடுத்து, பெரவள்ளூர் போலீசார் கமலக்கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை