உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆட்டோ ஓட்டுநருக்கு கத்திக்குத்து

ஆட்டோ ஓட்டுநருக்கு கத்திக்குத்து

வேளச்சேரி, ஜூன் 15-மேடவாக்கத்தை அடுத்த பொன்மார் பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி, 30. வேளச்சேரியை சேர்ந்தவர் ராகுல்ராஜ், 27. இருவரும் ஆட்டோ ஓட்டுநர்கள். வேளச்சேரியில் உள்ள ஒருவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில், நேற்று முன்தினம் இருவரும் பங்கேற்றனர். அப்போது போதையில் இருந்த இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராகுல்ராஜ், கத்தியால் குருமூர்த்தி கை, இடுப்பில் குத்தினார். இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. வேளச்சேரி போலீசார், நேற்று, ராகுல்ராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ