உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆட்டோ ஓட்டுநர்கள் அடாவடி பூந்தமல்லியில் பயணியர் அவதி

ஆட்டோ ஓட்டுநர்கள் அடாவடி பூந்தமல்லியில் பயணியர் அவதி

பூந்தமல்லி,பூந்தமல்லி, டிரங் சாலையில் பேருந்து நிலையம், நீதிமன்றம், சார் - பதிவாளர் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக கடைகள் அமைந்துள்ளன. சுற்றியுள்ள 20 கிராம மக்கள், தங்கள் அடிப்படை தேவைகளுக்காக, பூந்தமல்லி வருகின்றனர். தவிர, பூந்தமல்லியில் இருந்து பேருந்து வாயிலாக, பிற மாவட்டங்களுக்கும் செல்கின்றனர்.பூந்தமல்லி பேருந்து நிலையத்தின் வெளியே பேருந்துகள் வரும் வழியை ஆக்கிரமித்து ஆட்டோக்களை நிறுத்துவதால், ஏராளமான பயணியர் அவதிப்படுகின்றனர்.தவிர, போரூர் - ஸ்ரீபெரும்புதுார் செல்லும் பேருந்துகள், நிலையத்தின் வெளியே நின்று செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது.பயணியர் கூறியதாவது:பேருந்து நிலையத்தின்வெளியே, ஆட்டோக்களை இடையூறாக நிறுத்துவதால், பேருந்தை பிடிக்க முடியாமல் அவதிப்படுகிறோம்.அங்கு, பாதுகாப்பு பணியில் போக்குவரத்து போலீசார் இருந்தாலும், ஆட்டோ ஓட்டுநர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதே இல்லை. பூந்தமல்லி பேருந்து நிலையத்தின் வெளியே, ஆட்டோக்கள் நிறுத்த தனி இடம் அமைக்க வேண்டும். பயணியருக்கு இடையூறாக நிறுத்தும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ