உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  தீக்கிரையான ஆட்டோக்கள்

 தீக்கிரையான ஆட்டோக்கள்

அசோக் நகர்: பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவால், இரண்டு ஆட்டோக்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாயின. அசோக் நகர், 88வது தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார், 45; ஆட்டோ ஓட்டுநர். இவரது ஆட்டோ, நேற்று அதிகாலை 3:00 மணியளவில் தீப்பற்றி எரிந்துள்ளது. மேலும், அருகில் இருந்த மற்றொரு ஆட்டோவிலும் பரவி தீப்படித்தது. அசோக் நகர் தீயணைப்பு நிலை வீரர்கள் தீயை அணைத்தனர். விசாரணையில், ஆட்டோவில் உள்ள பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிந்தது. இது குறித்து, கே.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை