உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குப்பை தரம் பிரித்து கொடுக்காதவர் மீது அபராதம் விதிக்க ஆவடி மாநகராட்சி முடிவு

குப்பை தரம் பிரித்து கொடுக்காதவர் மீது அபராதம் விதிக்க ஆவடி மாநகராட்சி முடிவு

ஆவடி,ஆவடி மாநகராட்சியில் குப்பை, தரம் பிரித்து கொடுக்காதவர்கள் மீது திடக்கழிவு மேலாண்மை சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.கடந்த ஒரு வாரமாக, ஆவடி மாநகராட்சியில் உள்ள 6,000 வணிக நிறுவனங்களுக்கு, திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதில், 60 சதவீத வணிக நிறுவனங்களில், தனித்தனியாக குப்பை தொட்டி வைத்து, மட்கும் குப்பை, மட்காத குப்பை, தரம் பிரித்து கொடுக்கவில்லை என தெரிந்தது.இந்த நிலையில், ஆவடி மாநகராட்சியில் குப்பை தரம் பிரித்து கொடுக்காதவர்கள் மீது, திடக்கழிவு மேலாண்மை சட்டத்தின்படி, அபராதம் விதிக்க, மாநகராட்சி கமிஷனர் சரண்யா உத்தரவிட்டுள்ளார்.முதற்கட்டமாக, விதிமீறும் வீடு, கடை மற்றும் வணிக நிறுவனங்களில் எச்சரிக்கை 'நோட்டீஸ்' ஒட்டும் பணி, விரைவில் துவங்க உள்ளது.அதன்பின், குப்பை தரம் பிரித்து கொடுக்காதவர்கள் மீது திடக்கழிவு மேலாண்மை - 2016 விதிகளின்படி அபராதம் விதிக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.அதன்படி, குப்பையை முறையாக அப்புறப்படுத்தாமல் எரித்தால் 200 ரூபாய் அபராதம். பொது இடங்களில் குப்பை கொட்டினால் 500 ரூபாய் அபராதம். குப்பை தரம் பிரிக்காமல் கொடுத்தால் 500 ரூபாய் அபராதம்.தனியார் நிறுவனங்கள், மொத்தமாக குப்பை சேகரித்து முறையாக அப்புறப்படுத்த தவறினால் 10,000 ரூபாய் அபராதம்.பொதுக் கூட்டத்தின் முடிவில், குப்பை அகற்றி சுத்தம் செய்யாத தனியார் நிறுவனங்களுக்கு, அதிகபட்சமாக 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க, ஆவடி மாநகராட்சி முடிவு செய்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட பகுதி மக்கள், கடை, வணிக நிறுவனங்கள் குப்பையை தரம் பிரித்து கொடுத்து ஒத்துழைக்குமாறு, ஆவடி மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை