உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குப்பை எரிப்பதை தடுக்க சிசிடிவி கேமரா தீர்ப்பாயத்தில் ஆவடி மாநகராட்சி தகவல்

குப்பை எரிப்பதை தடுக்க சிசிடிவி கேமரா தீர்ப்பாயத்தில் ஆவடி மாநகராட்சி தகவல்

சென்னை, குப்பை எரிக்கப்படுவதை கண்காணிக்க, குப்பைக் கிடங்கில், 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டு உள்ளதாக, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், ஆவடி மாநகராட்சி தெரிவித்துள்ளது.ஆவடி மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் திடக்கழிவு முறையாக அகற்றப்படுவதில்லை. குப்பை கிடங்குகளில் குப்பை எரிக்கப்படுவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க உத்தரவிட வேண்டும் என, திருவள்ளூரை சேர்ந்த ராஜாமணி என்பவர், தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.மனுவை தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. தீர்ப்பாயத்தில் ஆவடி மாநகராட்சி தாக்கல் செய்த அறிக்கை:ஆவடி மாநகராட்சியில் தினமும், 181 டன் திடக்கழிவு உருவாகிறது. தனிநபர் ஒருவர் 380 கிராம் திடக்கழிவை உருவாக்குகிறார். சேகரிக்கப்படும் திடக்கழிவு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. திடக்கழிவை கையாள, சோழம்பேடு, தெலுங்கு காலனி, முத்தாபுதுப்பேட்டை, சேக்காடு ஆகிய இடங்களில், 57.5 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.குப்பை கிடங்குகள் மாநகராட்சி ஊழியர்களால் தீவிர கண்காணிப்பில் உள்ளது. திடக்கழிவுகள் எரிக்கப்படுவதை தடுக்க, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !