உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.4.64 கோடி மோசடி ஆவடி பெண் கைது

ரூ.4.64 கோடி மோசடி ஆவடி பெண் கைது

ஆவடி, ஆவடியில், 4.64 கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக இருந்த பெண் கைது செய்யப்பட்டார். ராணிப்பேட்டையைச் சேர்ந்தவர் அமுதா, 44. இவருக்கு, ஆவடியைச் சேர்ந்த குப்பன் மற்றும் பிரேமா, 43 ஆகியோருடன், பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும், ஆவடியில் கே.பி.என்., எனும் கிராண்ட் டிரஸ்ட் டெட் மணி என்ற பெயரில், நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். அதில், குப்பன் நிர்வாக இயக்குநராகவும், பிரேமா இயக்குநராகவும் இருந்தனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு, அதிக லாபம் ஆசைகாட்டியுள்ளனர். புதிதாக ஆட்களை சேர்ப்போருக்கு சிறப்பு பரிசாக 500 ரூபாய் வழங்கியுள்ளனர். இதனால், குறைந்த காலத்திலே ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர். அந்த வகையில் 4.64 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அமுதாவும் பணத்தை இழந்துள்ளார். இது குறித்து விசாரித்த ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஆவடி, பாரதி நகரைச் சேர்ந்த பிரேமா, 43, என்பவரை நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில், குப்பன் கடந்த ஏப்., 25ம் தேதி கைது செய்யப் பட்டிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ