உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆவிச்சி பள்ளி அணி கோ - கோவில் அசத்தல்

ஆவிச்சி பள்ளி அணி கோ - கோவில் அசத்தல்

சென்னை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன.இதில், பள்ளி, கல்லுாரி, அரசு ஊழியர்கள், பொது மற்றும் மாற்றுத்திறனாளிகள் என, ஐந்து பிரிவுகளில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன.இதில், பள்ளி மாணவர்களுக்கான கோ - கோ போட்டி, கீழ்ப்பாக்கம், செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என, 60 அணிகள் பங்கேற்றன. இதில், இறுதிப் போட்டியில், விருகம்பாக்கம் அரசு உதவி பெறும் பள்ளியான ஆவிச்சி பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடத்தை பிடித்து, 24,000 ரூபாய் ரொக்கப்பரிசை வென்றனர்.முகப்பேர் வேலம்மாள் பள்ளி முதலிடத்தை பிடித்தது. மூன்றாம் இடத்தை ராயபுரம் பி.ஏ.கே., பழனிசாமி பள்ளி அணி கைப்பற்றியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை