அயனாவரம் - பெரம்பூர் மெட்ரோ சுரங்கப்பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னை: மெட்ரோ ரயில் வழித்தடத்தில், அயனாவரம் - பெரம்பூர் இடையே சுரங்கப்பாதை பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. மெட்ரோ ரயில் ரயில் திட்டம் இரண்டில் 118.9 கி.மீ., நீளத்திற்கு, மூன்று வழித்தடங்களில் பணிகள் மும்முரமாக நடக்கின்றன. இதில் ஒன்றான, மாதவரம் - சிறுசேரி வழித்தடத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பதற்காக ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் 'மேலகிரி' எனும் இயந்திரம், அயனாவரம் நிலையத்தில் இருந்து, பெரம்பூர் நிலையம் வரை, 861 மீ., நீளத்திற்கு சுரங்கப்பாதை பணி, கடந்தாண்டு துவங்கியது. இந்த இயந்திரம் பணியை முடித்து, வெற்றிகரமாக நேற்று வெளியேறியது. பெரம்பூர் ரயில் தண்டவாளங்கள், நடைமேடைகள், அதிக மக்கள் தொகை உடைய கட்டடங்கள் மற்றும் நெருக்கமான பகுதிகளுக்கு அடியில் சுரங்கம் தோண்டுவது சவாலானது. அதேபோல், 32க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அப்பகுதியில் இருந்துள்ளன. இவற்றுக்கும், பொதுமக்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில், லாவகமாக பணி கையாளப்பட்டுள்ளது.