உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கவுன்சிலர்களுக்கான இறகுப்பந்து போட்டி

கவுன்சிலர்களுக்கான இறகுப்பந்து போட்டி

சென்னை, சென்னை மாநகராட்சி ஆண்டு விளையாட்டு போட்டிகள், நகரின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. பணியாளர்கள், ஊழியர்கள் மற்றும் கவுன்சிலர்கள் என, 2,416 பேர் பங்கேற்றுள்ளனர்.இதில் இறகுப்பந்து போட்டி, நேற்று முன்தினம் வியாசர்பாடி, முல்லை நகரில் நடந்தது. இதில், ஆண்களில், 116 பேரும், பெண்களில் 34 பேரும் பங்கேற்றனர்.கவுன்சிலர்களுகான தனிநபர் போட்டியில், கே.பி.சொக்கலிங்கம் முதலிடத்தையும், சங்கர் கணேஷ் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.இரட்டையருக்கான ஆட்டத்தில், சொக்கலிங்கம் - பரிதி இளம் சுருதி ஜோடி முதலிடத்தையும், நேதாஜி கணேஷ் - சிட்டு ஜோடி இரண்டாடமிடத்தையும் கைப்பற்றின. நேற்று, கீழ்ப்பாக்கம், நேரு பார்க் மைதானத்தில் நடந்த மாநகராட்சி ஊழியர்களுக்கான தடகளப் போட்டியில், 600 வீரர்,வீராங்கனையர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை