உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லுாப் சாலையில் இன்று முதல் மீன்கள் விற்க தடை விதிப்பு

லுாப் சாலையில் இன்று முதல் மீன்கள் விற்க தடை விதிப்பு

சென்னை, மெரினா, பட்டினப்பாக்கம், லுாப் சாலையில், 14.93 கோடி ரூபாய் மதிப்பில், நவீன மீன் அங்காடி கட்டப்பட்டுள்ளது.இதை ஆக., 12ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். 360 கடைகள் உள்ளன. மேலும், 84 பைக்குகள், 67 கார்கள் நிறுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. உயர் நீதிமன்ற உத்தரவின்படி, லுாப் சாலையில் வியாபாரம் செய்யும் நொச்சிக்குப்பம், நொச்சிநகர், டுமில் குப்பம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், இன்று முதல் நவீன மீன் அங்காடியில் மட்டுமே, மீன்களை விற்பனை செய்ய வேண்டும் என, மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.அவரது பேட்டி:நவீன மீன் அங்காடியில் மட்டுமே, இன்று முதல் வியாபாரிகள் மீன்களை விற்க வேண்டும். சாலையோரம் மீன்கள் விற்றால், உரியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீன் அங்காடிக்கு வரும் பொதுமக்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே, வாகனங்களை நிறுத்த வேண்டும். இவற்றை கண்காணிக்க மாநகராட்சி மற்றும் போக்குவரத்து போலீஸ் சிறப்புக் குழு அமைக்கப்படும். புறக்காவல் நிலையம் ஒன்றும் அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ